தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மருத்துவமனைகளில் 100% முகக்கவசம் கட்டாயம் எனவும் பொதுவெளிகளில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா அதிகமானால் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பு இல்லை. தனித்தனியாகவே கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையின் பாதிப்புகள் வீரியமாக இல்லை என கூறிய அவர் ஆக்சிஜன் தேவை என்ற நிலை தற்போது இல்லை. 64,271 படுக்கைகள் மற்றும் 24 ஆயிரத்து 500 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.