அதிமுக கட்சியில் சமீப காலமாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்புக்கு இடையே பிரச்சனைகள் நிலவும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மாறினார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதாவது தேர்தல் ஆணையம் அதிமுக பொது குழுவை ஏற்க வேண்டும் எனவும் தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி மனுதாக்கல் செய்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவின் விசாரணை இன்று  உச்ச நீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.