மத்திய அரசின் அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம் என்ற திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். அதாவது இவர்களின் கல்வி செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டில் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. அதாவது கல்விக்கான நிதியை விடுவிக்காததால் தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ எனப்படும் மாணவர் சேர்க்கை நடைபெறாத நிலையில் தற்போது மத்திய அரசு தொடர்பான நிதியை விடுவித்துள்ளதால் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.

அதாவது மத்திய அரசு அதற்கான கல்வி நிதியை விடுவித்ததால் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு அக்டோபர் 6-ல் வெளியாகும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 14ஆம் தேதி இறுதி மாணவர் பட்டியல் வெளியிடப்படும். மேலும் இதைத்தொடர்ந்து அக்டோபர் 16ஆம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.