தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டிகள் நிலவுகிறது. அதன்படி திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என மொத்தம் நான்கு முனை போட்டிகள் நிலவுகிறது.

அதன் பிறகு அரசியல் கட்சிகள் பலரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுக்களை வாங்கி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகமும் தற்போது அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 6-ம் தேதி முதல் விருப்பமனு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று போட்டி செய்து விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக வெற்றி கழகம் அறிவுறுத்தியுள்ளது.