இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான லிங்கமுத்து (75), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய முகங்களில் ஒருவராகத் திகழ்ந்த இவரது மறைவு, அக்கட்சியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,
இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, கட்சியின் வளர்ச்சிக்காக நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார்.
உடல்நலக் குறைவால் இன்று அவர் காலமான செய்தியைத் தொடர்ந்து, அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இவரது பங்களிப்பு என்றும் நினைவு கூறப்படும் எனத் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்
