தமிழகத்தின் 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் கட்சி தொடங்கிய இரண்டே வருடத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க இருக்கிறது. குறிப்பாக அந்த கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அதே நேரத்தில் சென்னையில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் படுதோல்வியை சந்தித்தார்.

அந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ் பாபு வெற்றி பெற்றுள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன் வெற்றியை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தார். அதே நேரத்தில் திமுக தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதால் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.