தமிழகத்தின் டிஜிபி ஆக சந்தீப் ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது. தற்போது சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையின் கமிஷனர் ஆக பணியாற்றியவர். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரையும் மாற்றம் செய்து வரும் நிலையில் மூன்று பேர் கொண்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் வழங்கி இருந்த நிலையில் அது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வந்தது.
அதில் சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர்களின் பெயர்க் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது மகேஷ் குமார் அகர்வாலை தமிழகத்தின் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 22 வயதில் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மகேஷ் குமார் அகர்வால் தற்போது BSF அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
