2026 தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் அரசியல் களம் பல எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் திமுகவில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படும் நிகழ்வாக, ‘தினசக்தி’ நாளிதழின் ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குநர் கோமாபுரம் சந்திரசேகரன் அவர்கள் இன்று (செப்.26) திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். திமுகவின் வளர்ச்சியோடு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்த சந்திரசேகரன், அக்கட்சியின் இலட்சியங்களும், சமூக நலனுக்கான கண்ணோட்டமும் தான் விசுவாசமுடன் நம்பும் கொள்கைகள் என்று கூறினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (26-09-2025) காலை, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், “தினசக்தி” நாளிதழின் ஆசிரியர் – நிர்வாக இயக்குநர் கோமாபுரம் இரா.ப.சந்திரசேகரன்… pic.twitter.com/QaQXubRwXW
— DMK (@arivalayam) September 26, 2025
“>
இந்த நிகழ்வில், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு இயக்குநர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
பத்திரிகைத்துறையிலிருந்து நேரடியாக அரசியலுக்குள் வருகை புரிந்த இந்த நிகழ்வு, திமுகவின் தொண்டர் வலையமைப்பையும் ஊக்குவிக்கக் கூடிய ஒரு நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வலுவான அணிக்கட்டமைப்பில் இது ஒரு முக்கிய கட்டமாகவும் கருதப்படுகிறது.
