“பல வருஷமா நாங்க படிச்ச 4,500 வருஷம் பழமையான அந்தப் வரலாற்றுச் சிலைக்குப் புதுசா இப்போ டிரஸ் மாட்டி விட்டிருக்காங்க !”

என்று கல்வியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் சமூக வலைதளங்களில் கொதித்துப்போய் விவாதிக்கும் அளவுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (NCERT) வெளியிட்டுள்ள புதிய 9-ஆம் வகுப்பு கலைக் கல்விப் பாடப்புத்தகத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் புகழ்பெற்ற ‘நடனமாடும் சிறுமி’ (Dancing Girl) வெண்கலச் சிலையின் அசல் வடிவம் மாற்றப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புதிய புத்தகத்தில், 10.5 செ.மீ உயரம் கொண்ட இந்த வரலாற்று விசித்திரச் சிலையானது, நகைகளைத் தவிர ஆடையின்றி இருக்கும் அதன் அசல் வடிவத்திற்குப் பதிலாக, அடர் நிறத்தில் உடற்பகுதிகள் மூடப்பட்ட நிலையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2023-ஆம் ஆண்டு டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சியில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இந்தச் சிலையின் நவீன தழுவல் சின்னம் இளஞ்சிவப்பு மேலங்கியுடன் மாற்றியமைக்கப்பட்டதற்கு வரலாற்றாசிரியர்களிடம் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது பாடப்புத்தகத்திலும் இந்த விசித்திர மாற்றம் அரங்கேறியுள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதால், இதுகுறித்து மீண்டும் ஆராயப் பாடநூல் மேம்பாட்டுக் குழுவின் (NSTC) அவசரப் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

<a href=”http://

“>