தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சமீப காலமாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்து கொண்டிருந்தார். இந்த சூழலில் தற்பொழுது சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். எப்படி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தடுப்பது என்பது குறித்து உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது போன்றவை பற்றிய அறிவுரைகளை முதல்வர் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொலை, கொள்ளை, பாலில் கொடுமை போக்ஸோ வழக்குகளின் நிலை குறித்தும், முதல்வர் ஸ்டாலின் கேட்டறிகிறார்.