சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாளில் சவரனுக்கு 2000 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் ரூ.90400 ரூபாய்க்கும் ஒரு கிராம் 11,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 12327 ரூபாய்க்கும், ஒரு சவரன் 98616 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 167 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 167000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
