சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு 1240 வரையில் உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் 1560 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 74360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9295 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 10140 ரூபாய்க்கும், ஒரு சவரன் 81120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 120000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.