சென்னையில் இன்று (ஆக.30) ஆபரணத் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,620-க்கும், சவரன் ரூ.76,960-க்கும் விற்பனையாகி வருகிறது.
இதன் மூலம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளதுடன், வரலாற்றில் முதன்முறையாக ரூ.77,000 ஐ நெருங்கியுள்ளது. தங்கம் விலை அதிகரிப்பால், நடுத்தர மற்றும் பொதுமக்கள் சமூகத்தில் நகை வாங்கும் திட்டங்களில் பெரும் அதிர்ச்சியும் தயக்கமும் ஏற்பட்டுள்ளதுடன், திருமண மற்றும் விழாக்களுக்கு முன்பாக தங்கம் வாங்க திட்டமிட்டவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
தங்க விலை வரலாறு காணாத உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், சவரன் விலை ரூ.77,000-ஐ நெருங்கி விட்டது. இது பொருளாதார ரீதியாக நடுத்தர குடும்பங்களை பெரிதும் பாதிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வருகிற திருவிழாக்கள் மற்றும் திருமண பருவத்தில் தங்க நகைகள் வாங்க நினைத்தவர்கள், தங்களது திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பங்கு சந்தை நிலவரம், சர்வதேச பொருளாதார சூழ்நிலை உள்ளிட்டவை தங்க விலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
