சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 1600 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் உயர்ந்ததால் 1,02,160 ரூபாய்க்கு ஒரு சவரன் விற்பனையாகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 12,770 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 13,931 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,11,448 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 234 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 2,34,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
