சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் தற்போது மாலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 440 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 92640 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11580 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 12632 ரூபாய்க்கும், ஒரு சவரன் 101056 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 197 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 197000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.