தமிழ் சினிமாவில் வாகா என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ரன்யா ராவ். இவர் கன்னட சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ரன்யா ராவ் துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் ஏர்போர்ட்டில் வைத்து கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நடிகை ரன்யா ராவ் துபாயிலிருந்து கிலோ கணக்கில் தங்கத்தை கடத்தி வந்த நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர் அவர் மீதான குற்றங்களும் நிரூபிக்கப்பட்டது.
இந்நிலையில் தங்க கடத்தில் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு தற்போது வருவாய் புலனாய்வு துறை அமைப்பு 102 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும் இந்த அபராத தொகையை செலுத்த தவறினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என வருவாய் புலனாய்வுத்துறை அமைப்பு எச்சரித்துள்ளது.
