சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்த ஆன்லைன் சார்ந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் டெலிவரி ஊழியர்களுக்கு ஸ்கூட்டர் வாங்க தல 20000 ரூபாய் வீதம் மானியம் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அந்த வகையில் 2000 டெலிவரி ஊழியர்கள் E-ஸ்கூட்டர் வாங்குவதற்கு தலா 20,000 ரூபாய் மானியம் வழங்க 4 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.