வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயலின் தாக்கத்தினால், இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக, மாவட்டத்தின் இராமஸ்வரம் வட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று (ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திரு. சிம்ரன் ஜீத் சிங் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மற்ற கடலோர மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் வானிலை நிலவரத்தின் அடிப்படையில் விரைவில் உரிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் மழைக்கால நடவடிக்கைகளில் பாதுகாப்பாக இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
