சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை 560 வரையில் அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தற்போது 1120 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 85120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 70 வரையில் அதிகரித்து 10500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் 149 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 149000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று இருமுறை உயர்ந்த நிலையில் இன்றும் இருமுறை உயர்ந்துள்ளது. நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.