ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் கடற்கரையை நிலநடுக்கம் தாக்கிய உடனையே அந்நாடு முழுவதும் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சேதங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.