செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 22 வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், புழல் சிறையில் இருந்தவாறு இன்று  காணொளி காட்சி மூலம் சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டிவி ஆனந்த் முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருடைய நீதிமன்ற காவலை வரும்  மார்ச் மாதம் 4ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 22-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.