பாஜகவின் மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கௌஷல் (73) இன்று (டிசம்பர் 4) காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மூத்த வழக்கறிஞரான இவர், மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் மற்றும் சட்டத்துறையில் முக்கியப் பங்காற்றிய ஸ்வராஜ் கௌஷலின் இறுதிச் சடங்குகள் இன்று டெல்லியில் உள்ள லோதி சாலை தகன மைதானத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
