உத்தரப் பிரதேசத்தின் பாக்மத் (Baghpat) பகுதியைச் சேர்ந்த ஹர்ஷித் ஜெயின் (Harshit Jain) என்ற 30 வயது இளைஞர், டெல்லியில் வெற்றிகரமாக நடந்து வந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தனதுத் துணிக் கடையையும், அனைத்துச் சொத்துக்களையும் துறந்து ஜைனத் துறவியாக மாறியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், அவர் கண்ட பயம், தனிமை மற்றும் மரணத்தின் யதார்த்தம் அவரது மனதை ஆழமாகப் பாதித்தது. “மனிதன் தனியாகவே இவ்வுலகிற்கு வருகிறான், தனியாகவே செல்கிறான்” என்ற உண்மையை உணர்ந்த ஹர்ஷித், சுமார் நான்கு வருடங்களாக வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிச் சிந்தித்தப் பிறகு ஆன்மீகத்தை நோக்கித் திரும்பினார்.

இறுதியாக, துறவற தீட்சை (Diksha) பெற முடிவு செய்தார். அவரதுத் தந்தை சுரேஷ் ஜெயின் உட்பட அவரதுக் குடும்பத்தினர் அனைவரும், மகனின் இந்த முடிவுக்குப் பெருமையுடன் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, ஒரு பிரம்மாண்டமானச் சடங்கின் மூலம் ஹர்ஷித் தனது வாழ்க்கை ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கினார்.