உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் தேஹாட் (Kanpur Dehat) மாவட்டத்தில் உள்ள பராவுர் (Baraur) என்ற இடத்தில், ஒரு சிறுவன் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல், தாத்தாவுடன் ஓடும் பைக்கில் இருந்து திடீரெனக் குதித்த சம்பவம் அப்பகுதியில்ப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எதிர்பாராதச் செயலால், தாத்தா மற்றும் அவரது மற்ற இருப் பேரன்கள் உட்பட, பைக்கில் பயணித்த அனைவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.
कानपुर देहात
⏩ स्कूल जाने से बचने के लिए बच्चे ने दिखाई खतरनाक हरकत
⏩ चलती बाइक से बच्चे ने अचानक छलांग लगाई
⏩ छलांग मारते ही बाइक अनियंत्रित होकर सड़क पर गिर गई
⏩ बाइक पर सवार बाबा और दो बच्चे भी गिरे, गनीमत कोई घायल नहीं हुआ
⏩ मासूम स्कूल न जाने को लेकर जिद पर अड़ा,… pic.twitter.com/sRBHyQBAcY
— हिन्दी ख़बर | Hindi Khabar 🇮🇳 (@HindiKhabar) December 3, 2025
பள்ளிக்குச் செல்லாதிருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஓடும் வண்டியில் இருந்து குதித்தச் சிறுவன் அஹான் (Ahaan), உடனடியாக வீட்டிற்கு நோக்கி ஓடினான்.
மற்றவர்களைச் சமாதானப்படுத்தித் தாத்தா சத்தம் போட்டபோதும், அஹான் சிக்காமல் தப்பி ஓடிவிட்டான். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.
சாலையில் விழுந்த பைக்கைத் தூக்கிய பிறகு, தாத்தா புத்தன் சித்திக் (Puttan Siddiqui), மற்ற இரண்டுப் பேரன்களான ஆட்டிப் மற்றும் ஆஷிக்குடன் (Aatib and Aashiq) பள்ளிக்குச் சென்றார். பள்ளிக்குச் செல்லக் கூடாது என்பதற்காகச் சிறுவன் செய்த இந்தச் செயல், உள்ளூர் மக்களிடையே வியப்புடன் கூடியப் பேச்சாக உள்ளது.
