சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவி ஏற்றார் தர்மன் சண்முகரத்னம். அதிபர் தேர்தலில் தர்மன் ( 70.4%), சீன வம்சாவளி வேட்பாளர்கள் கொக் சாங்க் (15.72%), கின் லியான் (13.88%) வாக்குகள் பெற்றனர். சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றுள்ள தர்மன் சண்முக ரத்னம் சிறந்த பொருளாதார வல்லுனராக கருதப்படுபவர். வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்களில் 76% பேர் தர்மன் சண்முக ரத்தினத்திற்கு வாக்களித்துள்ளனர்