தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். இவர் சமீபத்தில் திமுகவுக்கு ஆதரவாக அடுத்து வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இருப்பதாக அறிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் சேர்க்கப்படுவதாக குற்றம் சாட்டிய அவர் தமிழக தேர்தல் பட்டியல்களில் வெளி மாநிலத்தவர் பெயர்களை சேர்க்கக்கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளார்.
மாநில அரசின் அனுமதி இன்றி தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் நாளை காலை 8 மணி முதல் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு நடிகர் மன்சூர் அலிகான் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ள நிலையில் அவரது இந்த கருத்து சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
