திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த காரும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லேசான காயங்களுடன் லாரி ஓட்டுநர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்