கேரள மாநிலத்தில் மொத்தம் 104 சட்டப்பேரவை தேர்தல்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து கேரளாவில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் கேரளாவில் ஆட்சியை தக்க வைக்க மொத்தம் 71 தொகுதிகளில் பெரும்பான்மை பெற வேண்டும். அந்த வகையில் தற்போது மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 95 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன்பிறகு கம்யூனிஸ்ட் கட்சி 42 இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மேலும் இதன் மூலம் கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
