சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்திற்கு சென்சார் போர்டு A சான்றிதழ் வழங்கியதால், 18 வயதுக்குட்பட்டோருக்கு படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
இதனை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து, “கூலி படத்தில் உள்ள காட்சிகள் U/A சான்றிதழுக்கு உட்பட்டவையாகத்தான் உள்ளன. ஏற்கனவே KGF, பீஸ்ட் போன்ற படங்களில் கூட அதிக வன்முறை காட்சிகள் இருந்தும் அவற்றிற்கு U/A சான்று வழங்கப்பட்டுள்ள நிலையில், கூலி படத்திற்கு ஏன் A சான்று வழங்கப்பட்டது?” என வாதிட்டது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுக்கு சென்சார் போர்டு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு குறித்த மேலான விசாரணை வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.
