2023ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதுகளை அறிவித்தது மத்திய விளையாட்டு துறை அமைச்சகம். கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக முகமது சாமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, முகமது  ஹு சாமுதீன் (குத்துச்சண்டை) ஆகியோருக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வைஷாலிக்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. தடகளத்தில் ஸ்ரீ சங்கர், பருல் சதுர்வேதி, வில் வித்தையில் ஓஜாஸ் பிரவீன், அதிதி கோபி சந்த் சாமிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.