தமிழகத்தில் தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையானது, அடுத்த முறை திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஏழை, எளிய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பெண்களின் வாக்குகளைக் கவரும் வகையில் அமைந்துள்ள முதலமைச்சரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச்,… pic.twitter.com/n7VrMqcrb7
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 13, 2026
“>
