சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1040 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 15,491 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,23,928 ரூபாய் க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
