தமிழகத்தில் விஜய் தலைமையில் ஆன தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், டாக்டர் பிரபு, கீர்த்தனா, வெங்கட்ரமணன், அருண் ராஜ், ராஜ்மோகன் உள்ளிட்ட ஒன்பது பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது 23 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கிறார்கள். மேலும் புதுமுகங்கள் பலருக்கு தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ள நிலையில் இன்று மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற உள்ள 23 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு!
தூத்துக்குடி – ஸ்ரீநாத்
அவினாசி – S.கமலி
குமாரபாளையம் – விஜயலட்சுமி
காஞ்சிபுரம் – R.V. ரஞ்சித்குமார்
கும்பகோணம் – வினோத்
திருவாடானை – ராஜீவ்
கடலூர் – ராஜ்குமார்
அரக்கோணம் -காந்திராஜ்
ஒட்டப்பிடாரம் – மதன் ராஜா
ராஜபாளையம் – ஜெகதீஸ்வரி
கிள்ளியூர் – ராஜேஷ் குமார்
ஈரோடு கிழக்கு – விஜய் பாலாஜி
ராசிபுரம் – லோகேஷ் தமிழ்செல்வன்
சேலம் தெற்கு – விஜய் தமிழன் பார்த்திபன்
ஸ்ரீரங்கம் – ரமேஷ்
மேலூர் – விஸ்வநாதன்
வேளச்சேரி – R.குமார்
ஸ்ரீபெரும்புதூர் – K.தென்னரசு
கோவை வடக்கு – சம்பத் குமார்
அறந்தாங்கி – முகமது பர்வேஸ்
தாம்பரம் – சரத்குமார்
ஆர்.கே.நகர் – மரிய வில்சன்
கிணத்துக்கடவு – விக்னேஷ்
