சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரே நாளில் ரூ.10 உயர்ந்து கிலோ ரூ.60க்கு விற்பனையாகிறது. சில்லறை கடைகளில் இதன் விலை கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை எட்டியுள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சந்தையில் சப்ளை குறைந்து, விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வரத்து சீராகும் வரை தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.
