காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் பட்டியல் வெளியானது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 10 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளை உறுதி செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் செல்வப் பெருந்தகை கையெழுத்திட்டுள்ளனர்.

அதன்படி திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது காங்கிரஸ். கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி தொகுதி பங்கிட்டை நிறைவு செய்துள்ளது திமுக.