அதிமுக மற்றும் பாமக இடையிலான கூட்டணி நாளை மறுநாள் இறுதியாக வாய்ப்புள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியானது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாமக பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது . கூட்டணி அமைப்பதில் பாமகவின் நிலைப்பாடு நொடிக்கு நொடி மாறுவதால் அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கூட்டணி குறித்து முடிவு எடுக்க இன்று மாலை பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.