காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடனடியாக அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சலுடன் கூடிய மூச்சுத்திணறல் காரணமாக அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே தற்போது மருத்துவர்களின் தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் உள்ளார். உடல்நிலை சீராகும் வரை அவரை மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிப்பதாகவும், தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.
