தமிழ் சினிமாவின் பிரபல கலை இயக்குனர் மிலன் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது மாரடைப்பால் காலமானார். கலாபக் காதலன் படத்தில் கலை இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து அஜித்தின் பில்லா, வீரம், வேதாளம் மற்றும் துணிவாகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

அஜித்தின் மிகவும் நெருங்கிய நண்பரான இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்திற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றிருந்தபோது மாரடைப்பு காரணமாக அங்கு உயிரிழந்தார். இவரது உடலுக்கு அஜித் மற்றும் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இவரின் மறைவை தொடர்ந்து விடாமுயற்சி படபிடிப்பு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.