லியோ படத்தின் நீக்கப்பட்ட காட்சி குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

லியோ  திரைப்படம் ட்ரெய்லர் வெளியானதில் ஏராளமான சர்ச்சைகளை படக்குழு சந்திக்க வேண்டியதாயிருந்தது.  படத்தில் விஜய் அவர்கள் கெட்ட வார்த்தை பேசுவதும்,  அதிகமான வன்முறை  காட்சிகள் நிறைந்த படமாகவும் இருப்பதால் சென்சார் போர்டில் பல காட்சிகள் லியோ-ல்  இருந்து நீக்கப்பட்டு படத்தின் ஒரிஜினல் தன்மையை அது குறைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலவிதமான தகவல்கள் பரவி வந்தன. 

தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் லியோ  படத்தின் சென்சார் கட் குறித்து சில தகவல்களை கூறியுள்ளார். அதில்,  படத்தில் வெறும் 43 நொடிகள் மட்டுமே சென்சாரில் கட் செய்யப்பட்டுள்ளதாகவும்,  அது படத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.  அந்த கட் செய்யப்பட்ட பகுதியை பின்னாளில் OTT  ரிலீஸ் செய்த பிறகும் நாங்கள் சேர்க்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர் மாஸ்டர் மற்றும் லியோ இரண்டிலும் ஏராளமான காட்சிகளை நான் எடுத்து இருக்கிறேன்.   தேவையில்லாத காட்சிகள் எதையும் எடுக்காமல் எது தேவையோ அதை மட்டும் எடுத்து இருக்கிறேன்.  எவ்வித டெலிட் செய்யப்பட்ட காட்சிகளும் எனது படத்தில் கிடையாது.  தேவையற்ற காட்சிகளை எடுக்க நான் விரும்புவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டின் ஆக சிறந்த இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அவர்களும் மிகவும் கச்சிதமாக திட்டம் தீட்டி தேவையான காட்சிகளை மட்டும் எடுக்கக்கூடிய திறமை மிக்கவர்.  அவரது படத்திலும் பெரும்பாலும் டெலீட்டட் சீன் எனப்படும் தேவையற்ற காட்சிகள் இருக்காது எனக் கூறி தமிழகத்தின் கிறிஸ்டோபர் நோலனாக லோகேஷ் கனகராஜ் வளர்ந்து வருகிறார் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.