கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் முடிவு அடைந்த நிலையில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து சித்த ராமையா முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் 24 பேர் புதிதாக அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்க உள்ளனர். ஏற்கனவே 10 பேர் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் இன்று காலை 11.45 மணிக்கு எச் கே படில், கே வெங்கடேஷ், தினேஷ் குண்டூரா உள்ளிட்ட 24 பேர் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.