Google Pay மட்டுமின்றி PhonePe, Paytm ஆகிய முன்னணி UPI செயலிகள் Debit Card வாயிலாக செய்யப்படும் UPI பண பரிவர்தனைக்கு மட்டுமே உதவுகிறது. எனினும் இனிமேல் பயனர்கள் RuPay கிரெடிட் கார்டு வாயிலாக நேரடியாக UPI Payments செய்யலாம். முன்பே Axis Bank, Bank of Baroda, Canara Bank, HDFC Bank, Kotak Mahindra Bank, Punjab national Bank, Union Bank of India போன்ற வங்கிகள் RuPay கிரெடிட் கார்டுகளை அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். வருகிற நாட்களில் இந்த வங்கிகளின் எண்ணிக்கையானது அதிகரிக்கும். இதேபோன்று முன்னனி VISA மற்றும் Master Card ஆகிய நிறுவனங்களின் கிரெடிட் கார்டு UPI பணப் பரிவர்தனைக்கு உதவாது. முதல் முறையாக RuPay இனிமேல் UPI பணப் பரிவர்த்தனை செய்ய உதவும்.

RuPay Credit கார்டு சேர்ப்பது எப்படி என்பது குறித்து காண்போம். நீங்கள் உங்களது வங்கிக்கணக்கை Google Pay செயலியில் சேர்ப்பது போன்றே RuPay கிரெடிட் கார்டு சேர்ப்பதும் எளிது. Google Pay ஆப் திறந்து அதில் “Settings” பக்கத்துக்கு செல்ல வேண்டும். அதில் “Set Up Payments method” கிளிக் செய்து Add RuPay Credit Card கிளிக் செய்ய வேண்டும். உங்களது Credit Card-ன் கடைசி 6 எண், காலாவதியாகும் தேதி, பின் மற்றும் OTP ஆகியவற்றை உள்ளிட வேண்டும். அதன்பிறகு உங்களின் RuPay கிரெடிட் கார்டு வாயிலாக UPI Payments செய்யலாம். இதனை பயன்படுத்த நீங்கள் Scanner, UPI ID, போன் நம்பர் (அ) Barcode வாயிலாக பணப் பரிவர்த்தனை செய்யலாம்.