பாஜக ஆட்சியில் 2014 – 2023 வரை வங்கிகள் ரூ.14.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளதாக மக்களவையில் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளார். பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 7,40,968 கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், கார்ப்பரேட் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை RBI பாரமரிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்