பாமக கட்சியில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்துள்ள நிலையில் அன்புமணியை ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்கினார். ஆனால் பாமக கட்சியின் தலைவராக அன்புமணியை ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி போலி ஆவணங்களை கொடுத்துள்ளதாக ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டிய நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இரு தரப்பிலும் பிரச்சனை இருப்பது தெரிய வந்தால் சின்னம் முடக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அன்புமணி தந்தை மகன் மோதலுக்கு காரணமே ஜிகே மணி தான் எனவும் அவரை துரோகி என்றும் விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது ஜிகே மணி பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, அன்புமணியை மத்திய அமைச்சராக்க வேண்டும் என ராமதாஸிடம் கூறியதே நான்தான். அவர் தலைவர் ஆன பிறகு மாவட்டம் தோறும் அழைத்து சென்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் நான்தான் அறிமுகம் செய்து வைத்தேன். அவரே என்னை தன்னுடைய அப்பாவுக்கு பிறகு நான் தான் என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது என்னை துரோகி என்று கூறுகிறார்.
அன்புமணிக்கு கட்சியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முதலில் கூறியது கூட நான் தான். தந்தையையும் மகனையும் பிரித்ததாக தற்போது என்னை துரோகி என்று விமர்சிப்பது மிகவும் மன வேதனையாக இருக்கிறது. அன்புமணி என்னை துரோகி என கூறினால் நானும் என் மகனும் கட்சியை விட்டு வெளியேறி விடுகிறோம். என்னுடைய எம்எல்ஏ பதிவையும் ராஜினாமா செய்து விடுகிறேன். மேலும் அவர் யாரையெல்லாம் துரோகி என்று கூறுகிறாரோ அவர்கள் எல்லோருமே கட்சியை விட்டு வெளியேறி விடுகிறோம் என்றார்.
