தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன் திரைப்படம் முதல் விடுதலை திரைப்படம் வரை அனைத்து திரைப்படங்களுமே ஹிட் தான். இவர் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் மற்றும் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் ஒரு இயக்குனராக மட்டுமின்றி Grass Root கம்பெனி மூலமாக படங்களை தயாரிக்கவும் செய்தார். இவரது தயாரிப்பில் மனுஷி மற்றும் பேர்டு கேர்ள் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் மனுஷி திரைப்படம் நீதிமன்றம் வரை சென்றது. அதன் பிறகு பேர்டு கேர்ள் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்த திரைப்படம் மூன்று முறை சென்சார் நிகழ்வுக்கு சென்றுள்ளது.
மேலும் இதை இரண்டையும் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சுட்டிக்காட்டி தயாரிப்பு பணியில் இருந்து விலகுவதாகவும் தன்னுடைய தயாரிப்பு கம்பெனியை இழுத்து மூடப் போவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் ஒரு இயக்குனராக சுதந்திரமாக செயல்படலாம் என்றும் அதுவே ஒரு தயாரிப்பாளராக இருப்பது மிகவும் அழுத்தம் நிறைந்தது என்றும் அவர் கூறி தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளார்.
