பாஜக தலைமையிடம் வழங்கப்பட்ட தமிழ்நாடு உத்தேச வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சீட் கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்த சிலரின் பெயர்களும் இடம்பெறவில்லை. அதேநேரம், மாநிலங்களவை எம்.பி.,யாக தேர்வாகியுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகனின் பெயர், திடீர் திருப்பமாக நீலகிரி தொகுதிக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.