ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாகி வருகிறது.

இந்நிலையில் ஈரோட்டு கிழக்கு இடைத்தேர்தல் 8-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 8 சுற்றுகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அதன்படி இதுவரை 61,125 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அதிமுகவின் தென்னரசு 22,587 வாக்குகளும், நாதக-வின் மேனகா நவனீ தன் 4,783 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 699 வாக்குகளும் பெற்றுள்ளனர்.