அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் சிறுமி ஒருவருக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்ததாக 37 வயதான நிக்கோலஸ் ஆலன் ஸ்பென்சர் என்பவர் மீது ஆயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 5,000-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை ஆவணங்களின்படி, சிறுமிக்கு 12 வயது இருந்தபோது நிக்கோலஸ் ஆலன் ஸ்பென்சர் அவரிடம் நெருக்கமாக பழக முயன்றதாக கூறப்படுகிறது. ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், பின்னர் பல ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சிறுமி தனது நண்பரின் அறிவுரையின்படி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பிறகு விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், ஸ்பென்சரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரது தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களையும் போலீசார் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் நிக்கோலஸ் ஆலன் ஸ்பென்சர் மீது மொத்தம் 5,538 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுமிக்கு ஏற்பட்ட பாதிப்பின் ஒவ்வொரு சம்பவத்துக்கும் தனித்தனியாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்..

சட்டவிரோதமான குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவுகள் வைத்திருந்தது, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கடுமையான தண்டனையை பெற்றுத்தர அரசு தரப்பு முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.