தமிழக வெற்றி கழகம் கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறது. காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததால் 113 ஆக பலம் உயர்ந்த போதிலும் இன்னும் பெரும்பான்மையை நீடிப்பதில் சிக்கல் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் விஜய் முதல்வராக பதவி ஏற்பதில் பிரச்சனை வந்துள்ளது. பெரும்பான்மையின் நிரூபித்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என ஆளுநர் கறார் காட்டி வருகிறார்.
இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து கிட்டத்தட்ட 15 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக ஒரு செய்தி பரவி வரும் நிலையில் அவர்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசாரிட்டில் தங்கியுள்ளனர். இந்த பரபரப்புக்கு மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் பரவுகிறது. தமிழக வெற்றி கழகத்தை வீழ்த்த திமுகவின் ஆதரவை எடப்பாடி பழனிச்சாமி நாடியதாகவும் அவர்கள் சம்மதித்தால் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி முடிவாக வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இதனை திமுக வட்டாரங்கள் மறுத்த நிலையில் இந்த செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் செம்மலையிடம் நிருபர்கள் இது பற்றி கேட்டனர். அவர் இந்த கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல் திமுக மற்றும் அதிமுக கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார் என்று கூறினார். அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கிங் அல்ல கிங் மேக்கர் எனவும் தெரிவித்தார். மேலும் இதனால் தற்போது தமிழக அரசியலில் காலம் காலமாக எதிரும் புதிருமாக இருந்து வந்த திமுக மற்றும் அதிமுக ஒன்றாக கைகோர்க்குமோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
