தொடர்விடுமுறையால் பொதுமக்களின் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி (உயிருடன்) விலை ₹5 உயர்ந்து ₹93க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை ₹5 உயர்ந்ததால், மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை ₹20 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை மாற்றமின்றி ₹5.20 ஆகவும், சென்னையில் ஒரு முட்டையின் விலை ₹5.80ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.