இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின்   நட்சத்திர வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான வேதா, 48 ஒருநாள் மற்றும் 76 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி, 1,700க்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ள முக்கிய பங்களிப்பாளராக இருந்தார். 2017 மகளிர் உலகக் கோப்பை மற்றும் 2020 டி20 உலகக் கோப்பையில் இரண்டாம் இடம் பெற்ற இந்திய அணியின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார்.

கர்நாடகாவைச் சேர்ந்த வேதா, தனது சமூக ஊடகப் பதிவில், “ஒரு சிறிய நகரத்தில் இருந்து பெரிய கனவுடன் கிளம்பிய என் பயணம் இந்திய ஜெர்சி அணிவதில் முடிந்தது. இந்த ஆட்டம் எனக்கு வாழ்க்கையே கொடுத்தது,” என உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார். விளையாட்டு வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குவதற்கான தீர்மானமாகவே இந்த ஓய்வு எடுத்துள்ளதாகவும், கிரிக்கெட்டுக்குத் திருப்பிக் கொடுக்கும் விதமாக புதிய பாதையில் பயணிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

“>

 

உள்நாட்டு மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளங்கிய வேதா, கர்நாடகா மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கு கேப்டனாக இருந்தார். 2017-18 WBBL லீகில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியில் சேர, 2024 WPL லீகில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார்.  அவரது ஓய்வால் இந்திய மகளிர் கிரிக்கெட் உலகம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.